Sunday, 30 October 2016

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக அதிக விலைமதிப்புள்ள பொருள் எது?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக அதிக விலைமதிப்புள்ள பொருள்
சர்வதேச விண்வெளி நிலையம்.

   

சர்வதேச விண்வெளி நிலையத்துக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை 150 பில்லியன் டாலர். 

அதாவது... சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய 5 விண்வெளி நிறுவனங்கள் இணைந்து இதனை நிர்வகித்து வருகின்றன. 

அமெரிக்காவும், ரஷ்யாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 


இது ஒரு பறக்கும் அறிவியல் ஆய்வகம். 

 

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்டது இந்த ஆய்வகம்.

பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இது பறந்துகொண்டிருக்கிறது. 

மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ஆய்வகம் பறக்கிறது.  

தினம்தோறும் 16 முறை பூமியை சுற்றி வருகிறது. 


1998 ஆம் ஆண்டில் இதன் கட்டுமான வேலைகள் தொடங்கின.


2000 மாம் ஆண்டு முதல் இங்கு விண்வெளி வீரர்கள் தொடர்ந்து தங்கி வருகிறார்கள். 
எப்போதும் 6 பேர் இங்கு தங்கி ஆய்வு செய்து வருகிறார்கள். 
18 நாடுகளை சேர்ந்த 222 பேர் இங்கு சென்று வந்திருக்கிறார்கள். 


கல்பனா சாவ்லா 

இந்தியாவில் பிறந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 2 முறை இங்கு சென்றவர்.

2013 ஆம் ஆண்டில், 2 வது பயணம் முடித்து திரும்பும் வழியில் நடந்த விபத்தில் சக வீரர்களுடன் பலியானார்.   


நாஸா விண்கலங்களின் சேவை நிறுத்தம்


சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அழைத்துச் சென்று வந்த 
நாஸா விண்கலங்களின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. 


சோயுஸ் விண்கல சேவை

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்கள் மட்டுமே அந்த சேவையை இப்பொது வழங்குகின்றன. 
உணவு மற்றும் பொருட்களை கொண்டுசெல்ல, தனியார் விண்கல சேவை பயன்படுத்தப் படுகிறது. 



2024 க்குப்பின் விண்வெளி நிலைய ஆய்வுகள் என்ன ஆகும்?


சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான செலவுகள் மிக அதிகம் என்றும் 
அமெரிக்காவும், ரஷ்யாவும் 2024 ஆம் ஆண்டுக்குப்பின் அதனைக் கைவிடப் போவதாகவும் 
தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது.
2022 இல் தொடங்கி சீன விண்வெளி நிலைய ஆய்வுகள் நிரந்தரமாய் தொடரும் என அறிவித்திருக்கிறது.  

No comments:

Post a Comment